கோயம்புத்தூர்: பொள்ளாச்சி, ஆனைமலை தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன்-சரோஜினி தம்பதியினருக்கு இரண்டரை வயதில் நிவ்யாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குழந்தை உயிரிழந்துள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து காவலர்கள் தனிப்படை அமைத்து விசாரணை செய்ய, அம்மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து வால்பாறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் சின்ன காமன் கார்த்தி, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குழந்தையின் தாயான சரோஜினியிடம் விசாரித்த போது, அவர் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும் தனக்கும் தன் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருவதால், தனது அம்மா வசிக்கும் சேத்துமடை அண்ணா நகர் பகுதி வீட்டுக்கு சென்று வருவதாக கூறினார்.
காதலனுடன் சிறை பிடிக்கப்பட்ட தாய்
இதையடுத்து அவர் கூலி வேலைக்கு செல்லும் பொழுது சர்க்கார்பதி சேர்ந்த பொம்மன் என்கிற சின்ன பொம்மனை கடந்த சில மாதங்களாக காதலித்து அவருடன் தனிமையில் இருந்ததாகவும் கூறினார்.
மேலும் இந்த உறவுக்கு சிறுமி இடைஞ்சலாக உள்ளதால், நிவ்யாஸ்ரீயை கொலை செய்ய பொம்மன் கூறியதால், கடந்த 14ஆம் தேதி கழுத்து நெரிந்து கொலை செய்ததாக சரோஜினி தெரிவித்தார்.
இதையடுத்துத தலைமறைவாக இருந்த பொம்மனை, சேத்து மடை பேருந்து நிறுத்தத்தில் வைத்து பிடித்தனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றம் முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை- மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர்