கோவை மத்திய சிறை வளாகத்தில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அவ்வப்போது தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள், செல்ஃபோன்கள் பயன்படுத்துவதால் அவ்வப்போது சோதனை நடைபெறுவது வழக்கம்.
நேற்று மாலை சிறை வளாகத்தில் வழக்கமான சோதனைப் பணியில் ஈடுபட்ட காவலர்கள், தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த மூன்று செல்ஃபோன்களை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற சோதனையில் நான்கு செல்ஃபோன்கள் என மொத்தமாக ஏழு செல்ஃபோன்கள் சிக்கியதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செல்ஃபோன்கள் அனைத்தும் தண்டனைக் கைதிகளின் பிளாக்கில் உள்ள கைதிகள் அடைக்கப்படாத அறையின் கழிவறையிலிருந்து எடுக்கப்பட்டதாகச் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் பார்க்க : போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு