கோவை தெற்குத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இருப்பினும் மக்கள் மத்தியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றனர்.
இதையடுத்து, பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அதிமுக, பாஜக அமைச்சர்களும், இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் பரப்புரை மேற்கொண்டனர்.
அந்த வகையில் தற்போது திரைப் பிரபலமான மதுவந்தியும், பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டனர்.
பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் புதுப்பாலம் பகுதியில் மதுவந்தியும் நடந்துசென்று வாக்குச் சேகரித்தனர்.