கோவை: துடியலூரை அடுத்த பன்னிமடை லட்சுமி நகரானது சின்னமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 19) இரவு, லட்சுமி நகரில் இரண்டு காட்டு யானைகள் சர்வசாதாரணமாக தெருக்களில் நடந்து வந்தன.
பின்னர் குடியிருப்பு பகுதிகளின் வழியாக சென்ற காட்டு யானைகள், அங்கிருந்த வாழைத் தோட்டத்தை சேதப்படுத்தின. மேலும் தெருக்களில் இருந்த மரங்களின் கிளைகளை உடைத்த காட்டுயானைகள், அதனை சாப்பிட்டபடி சர்வசாதாரணமாக நடந்து சென்றன.
இதனையடுத்து காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் தடுப்பதற்கான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது.
இதையும் படிங்க: திருக்கார்த்திகை ஸ்பெஷல்: குமரியில் சிறுவர்கள் செய்த பிரமாண்ட சூரன்!