ETV Bharat / state

வாக்கு இயந்திரத்தில் கோளாறு: தாமதமாக தொடங்கிய சூலூர் இடைத்தேர்தல்! - Covai

கோவை: இடைத்தேர்தல் நடைபெறும் சூலுார் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாதனதால் வாக்குப்பதிவு ஒரு மணிநேரம் தாமதமாக தொடங்கியது.

covai
author img

By

Published : May 19, 2019, 8:17 AM IST

Updated : May 19, 2019, 10:37 AM IST

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமானது. மொத்தம் எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாட்டில் சூலுார் உட்பட நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் சூலுார் தொகுதியில் உள்ள 324 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சூலுார் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 22 பேர் களத்தில் உள்ளனர். இன்று வாக்குப்பதிவு ஆரம்பமான நிலையில், நேற்று முன்தினம் (மே 17) தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவிறகான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

இத்தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்களார்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 397 பேர் ஆண்கள், 1 லட்சத்து 49 ஆயிரத்து 743 பேர் பெண்கள் மற்றும் 18பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 121 இடங்களில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 32 இடங்களில் உள்ள 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவத்தினர் 212 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் 648 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 324 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 324 வி.வி.பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) பயன்படுத்தப்படுகிறது.

தாமதமாக தொடங்கிய சூலுார் இடைத்தேர்தல்

பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 191 வாக்குச்சாவடிகளில் ‘வெப்’ கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு பணியாளர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் கருமத்தம்பட்டி புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு இயந்திரம் வேலை செய்யாததால் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மாற்று மின்னணு வாக்ழுப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்ட நிலையில் ஒரு மணிநேரம் தாமதமாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

சு.சீனிவாசன்.      கோவை

சூலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 324 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.மின்னண  இயந்திரம் பழுதானதால் ஒரு வாக்கு சாவடியில் வாக்கு பதிவு துவங்கவில்லை..

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர்களால் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சூலூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 397 பேர் ஆண்கள். 1 லட்சத்து 49 ஆயிரத்து 743 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் உள்ளனர்.

பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சூலூர் தொகுதியில் 121 இடங்களில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 32 இடங்களில் உள்ள 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு துணை ராணுவத்தினர் 212 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வீதம் 648 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 324 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 324 வி.வி.பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) பயன்படுத்தப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்காக 324 சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் மையம் எது என்பதை எளிதாக கண்டறிய ஏற்கனவே பூத் சிலிப்புகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினருடன், கூடுதலாக ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் 2 போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 191 வாக்குச்சாவடிகளில் ‘வெப்’ கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட முடியும். வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு பணியாளர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது.இதில் கருமத்தம்பட்டி புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு சாவடி எண்ணில் உள்ள மின்னணு இயந்திரம் வேலை செய்யாததால் மாற்று இயந்திரம் எடுத்து வரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வாக்கு சாவடியில் வாக்கு பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

Video in reporter app
Last Updated : May 19, 2019, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.