ETV Bharat / state

தந்தை சாவில் மர்மம் இருப்பதாக மகன் நீதிபதியிடம் புகார்!

கோவை: தனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரை யாரோ திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகவும் லாட்டரி மார்டினின் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றிய பழனிசாமியின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்.

ரோகின் குமார்
author img

By

Published : May 4, 2019, 11:27 PM IST

கோவை மார்டின் குரூப் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தவர் பழனிசாமி. இவர் நேற்று காரமடை பகுதியில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தனது தந்தை தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், யாரோ அவரை திட்டமிட்டு கொலை செய்திருப்பதாகவும் பழனிசாமியின் மகனான ரோகின் குமார் தலைமை குற்றவியல் நீதிபதியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும், அவர் பணிபுரிந்த அலுவலகத்தில் உள்ள இருவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சு.சீனிவாசன்.       கோவை

எனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்யவில்லை, அவரை திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர் என லாட்டரி மார்டினின் காசாளர் பழனிசாமியின் மகன் ரோகின் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  

மார்டின் குரூப் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்த பழனிச்சாமி என்பவர் நேற்று காரமடை அருகே குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். 
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், 
நீதிபதி முன்னிலையில் சடல விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும்,  இறந்தவரின் மகன் ரோகின் குமார் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் மனு அளித்தார். மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உடற்கூறு ஆய்வு செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எனது தந்தை தற்கொலை செய்யவில்லை என்றும் திட்டமிட்டு படு
கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார். 
எனது தந்தையின் மரணத்தின் மர்மம் உள்ளதாகவும், 
தந்தை கொலையில் மார்டின் நிர்வாகத்தில் வேலை செய்யும் உயர் அதிகாரிகள் இருவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் அப்போது அவர் கூறினார். மேலும் வருமானவரி துறை அதிகாரிகள் தந்தையை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தல் ஆளாகியதாகவும், 
வருமானவரி துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதும், கடுமையான வார்த்தைகள் பேசியதும் என் கண்களால் பார்த்தேன் எனவும் புகார் தெரிவித்தார்.
வருமானவரி துறையில் இருந்து தனது விட்டிற்கு 7 பேர் வந்ததாகவும் அதில் ராஜன் என்பவர் என் தந்தையின் கன்னத்தில் அடித்தாகவும், எனது வீட்டில் இருந்து எவ்வித ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டினார். 
எனது மூன்று கோரிக்கை வைத்து உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் அது வரை உடலை வாங்கமாட்டோம் எனவும் மேலும் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் என் தந்தையின்  உடலில் காயம் உள்ளது, எனவே தண்ணீரில் மூழ்கி இறந்தவருக்கு தலையில் மூக்கில் காயம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் சுட்டிக் காட்டினார். 
மனுவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜனிடம் வழங்கியதாகவும், இம்மனுவை பெரியநாயக்கன்பாளையம் காவல் கண்கானிப்பாளரிடம் வழங்கி அவர் மூலம் ஆர் டி ஒ விசாரணை நடத்த நிதிபதி அறிவுறுத்தியுள்ளாதாகவும் கூறினார். 

Video in ftp

TN_CBE_1_4_SUICIDE ISSUE_PETITION_9020856
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.