கோவை மாவட்டம், சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சி ஒரு நிமிடம் கூட நீடிக்ககூடாது என முடிவெடுத்து மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்தனர்.
ஐந்துமுறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனைத்து தரப்பு மக்களுக்கும் பல திட்டங்களை தந்தவர். ஆனால் அதிமுக அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்காமல் மோடியின் எடுபிடியாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற இடைத்தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். திமுக வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தால், 10ம் வகுப்பு படித்த ஒரு கோடி பேருக்கு சாலைப்பணியாளர் பணி வழங்கப்படும்", என்றார்.