ETV Bharat / state

கோவையில் விஜயகாந்தின் 70ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் - Celebration at Anthony s Church

கோவையில் உள்ள புலியகுளம் விநாயகர் கோயிலில் இன்று தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் கேப்டன் விஜயகாந்த் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம்

author img

By

Published : Aug 25, 2022, 4:18 PM IST

கோவை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70ஆவது பிறந்த நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தேமுதிகவினர் புலியகுளம் விநாயகர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.

பின்னர் அதே பகுதியில் அமைந்துள்ள அந்தோணியார் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். இதன்பின்னர் திருச்சி சாலையில் உள்ள தர்காவில் தொழுகை நடத்தினர். இதனையடுத்து கோவை காய்கடை மைதானத்தின் அருகில் உள்ள தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றி கேக் வெட்டி கொண்டாடிய தேமுதிக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

கோவையில் விஜயகாந்தின் 70ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

இந்த நிகழ்ச்சிகளில் கோவை மாநகர மாவட்டச்செயலாளர் சிங்கை சந்துரு, மாநில சட்ட ஆலோசகர் முருகராஜ், மாவட்ட பொருளாளர் ராகவலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:கோவில்பட்டியில் விஜயகாந்த் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.