கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்ற ஆணி குமார். இவர் மேட்டுப்பாளையத்திலிருந்து வாங்கிவந்த கஞ்சாவை வடகோவை, கணபதி, ஆர்.எஸ். புரம், சிவானந்தா காலனி போன்ற பகுதிகளில் விற்று வந்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தகவலறிந்த காட்டூர் காவல் ஆய்வாளர் லதா, உதவி ஆய்வாளர் முத்து ஆகியோர் தலைமையில் ஆணி குமாரை கையும்களவுமாகப் பிடித்தனர். மேலும் அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையில் கஞ்சா விற்பனை சம்பவங்கள் பல இடங்களில் நடந்துவருகிறது. முக்கியமாக பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இதை தடுக்க காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க; உதவி ஆய்வாளர் கொலை வழக்கு: கொலையாளி குறித்து துப்பு கொடுத்தால் ரூ.7 லட்சம் ரெடி