ETV Bharat / state

ஆந்திரா டூ கோயம்புத்தூர் கஞ்சா கடத்தல்- இருவர் கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு

ஆந்திராவில் இருந்து ரயில் மூலமாக கடத்திவரப்பட்ட 38 கிலோ கஞ்சாவை, போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Cannabis seized by Drug Prevention Unit Police in coimbatore  Cannabis seized  coimbatore news  coimbatore latest news  Cannabis seized by Drug Prevention Unit Police  Cannabis  கஞ்சா பறிமுதல்  கஞ்சா  கோயம்புத்தூரில் கஞ்சா பறிமுதல்  கோயம்புத்தூர் செய்திகள்  போதை பொருள் தடுப்பு பிரிவு  கஞ்சா கடத்தல்
கஞ்சா பறிமுதல்
author img

By

Published : Jul 23, 2021, 7:13 AM IST

கோயம்புத்தூர்: ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில், கஞ்சா கடத்தி வருவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இது குறித்து இரயில்வே காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சபரி விரைவு வண்டியில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த இரண்டு நபர்களை ரயில்வே காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின்பாக பதில் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வைத்திருந்த 38 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Cannabis seized by Drug Prevention Unit Police in coimbatore  Cannabis seized  coimbatore news  coimbatore latest news  Cannabis seized by Drug Prevention Unit Police  Cannabis  கஞ்சா பறிமுதல்  கஞ்சா  கோயம்புத்தூரில் கஞ்சா பறிமுதல்  கோயம்புத்தூர் செய்திகள்  போதை பொருள் தடுப்பு பிரிவு  கஞ்சா கடத்தல்
கஞ்சா கடத்திய இருவர்

விசாரணையின் போது கடத்தலில் ஈடுபட்டவர்கள், தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்லத்துரை, கதிரேசன் எனத் தெரியவந்தது. மேலும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி வந்து தேனியில் விற்பனை செய்வதற்காக இரயில் மூலம் கஞ்சாவை கோயம்புத்தூருக்கு வரவழைத்து, பின் அங்கிருந்து தேனிக்கு பேருந்தில் செல்ல திட்டமிட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் ரயில்வே கலால் துறையினர், போதை பொருள் தடுப்பு பரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் லாரி மோதி 15 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.