கோயம்புத்தூர்: கோவை மாவட்ட காவல்துறை தற்போது ரோந்து வாகனங்களுக்கு L&T அமைப்பினருடன் இணைந்து அதிநவீன கேமராக்களை பொருத்தி உள்ளது. முதற்கட்டமாக 18 ரோந்து வாகனங்களுக்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார்.
கேமராக்களில் உள்ள வசதிகள்:
ஒரு வாகனத்திற்கு இரண்டு அதிநவீன (Day and night, IR Camera) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு கேமரா முன்புறம் நோக்கியவாறும், மற்றொரு கேமரா பின்புறம் நோக்கியவாறும் பொருத்தப்பட்டுள்ளன. இவை தண்ணீர் பட்டாலும் சேதமடையாதது போல் உருவாக்கப்பட்டுள்ளன.
கேமராவைச் சுற்றிய கண்ணாடி எளிதில் உடையாத தன்மையுடனும், கைரேகை உள்ளிட்ட அச்சுகள் பதியாதவாறும் தயாரிக்கப்பட்டு உள்ளது. வாகனத்திற்கு உள்ளே ஒரு சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. அதில் 2TB Hard Disk உள்ளது.
இதில், கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் சேகரிக்கப்படுகின்றது. இவை HD Quality யாக இருந்தால் இரண்டு மாதங்கள் வரை சேகரிக்கும் திறன் கொண்டதாகவும், 4K Quality என்றால் சுமார் 30 நாட்கள் வரை சேகரிக்கும் திறனுடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அவ்வப்போது தேவைப்படும் வீடியோக்களை மற்றொரு கணினிக்கு ஏற்றிக் கொள்ளலாம். கேமராவில் குறிப்பிட்ட அளவிற்கு Zoom செய்ய முடியும். பொருத்தப்பட்டுள்ள சிஸ்டத்தில் இண்டர்நெட் வசதிகளும் உள்ளன. அந்த வசதிகளைக் கொண்டு நேரடியாக காவல் கண்காணிப்பாளர் அறைக்கு ஒளிபரப்பும் படியான வசதி உள்ளன.
வாகனத்தில் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கைக்கு முன் 7 இன்ச் TFT டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளன. இந்த டிஸ்ப்ளே பேனலில் தேர்ந்தெடுக்கும் படியான பட்டன்களும் உள்ளன. இதில், ஒரே நேரத்தில் இரண்டு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை நேரலையாக பார்க்க இயலும். வேண்டுமென்றால் ஒரு கேமரா காட்சியை மட்டும் தேர்ந்தெடுத்துப் பார்த்து கொள்ளலாம். Pause, Play, Forward, Backward, என அனைத்தையும் செய்ய முடியும். இதில் ஜிபிஎஸ் வசதியும் உள்ளது.
இது குறித்து L&T Project Head சுரேஷ் சங்கர் நாராயணன் கூறுகையில்,“மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து ரோந்து வாகனங்களுக்கு கேமராக்கள் வேண்டுமென கோரப்பட்டது. அதன்படி, இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இரண்டும் IR வசதியுடன் கூடிய Day and Night கேமராக்கள். வாகனத்திற்கு உள்புறம் 7 இன்ச் TFT டிஸ்ப்ளே உள்ளது. இதில், பதிவாகும் காட்சிகள் 45 நாட்களுக்கு பேக் அப் ஆக இருக்கும். 2 TB Hard Disk உள்ளது. காவல்துறையினர் தேவைப்பட்டால் அதில் பதிவான காட்சிகளை எடுத்து வைத்து கொள்ளலாம்.
மேலும், காவல் கண்காணிப்பாளர் அவரது அறையில் இருந்த படியே கண்காணிக்கலாம். அதற்கான WiFi வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதன்முறையாக இது போன்ற ஒரு கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனை SMU- Surveillance Monitoring Unit என்று நாங்கள் கூறுவோம். ஒரு வாகனத்தித்கு 1.25 லட்சம் ஆனது என்றார்.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்: ஆவணங்களை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க காவல் ஆணையர் உத்தரவு!