ETV Bharat / state

கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது - அமைச்சர் எச்சரிக்கை! - கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கட்டணம்

கோவை: கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுமக்களுக்கு அரசு செட்டாப் பாக்ஸை இலவசமாக வழங்கி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

udumalai radhakrishnan
author img

By

Published : Aug 16, 2019, 7:12 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் 239 மாணவ-மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள விலையில்லா மடிக்கணனிகளை தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரியத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இலவச மடிக்கணினிகள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுமக்கள் வைத்திருக்கும் மாற்று நிறுவன செட்டாப் பாக்ஸை அரசு செட்டாப் பாக்ஸுக்கு மாற்றுவதற்கு தயக்கம் காட்டுவதாக தகவல் வந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரியம் சார்பில் தமிழ்நாடு அரசு ஒரு மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவித்த அமைச்சர், ஜூலை மாதம் 23ஆம் தேதிக்குப் பிறகு எந்தெந்த பகுதியில் அரசு செட்டாப் பாக்ஸ் ஓடியதோ, அந்தந்த வீடுகளில் மீண்டும் அரசு செட்டாப் பாக்ஸ் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அரசு நிர்ணயித்த 153 ரூபாயை மாத கட்டணத்தைவிட கூடுதலாக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுமக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும், அதையும் மீறி வசூலித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கால்நடை பராமரிப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Intro:schoolBody:schoolConclusion:கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுமக்களுக்கு அரசு செட்டாப் பாக்ஸ்சை இலவசமாக வழங்கி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

பொள்ளாச்சி - ஆகஸ்ட் -16

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது, இதில் 239 மாணவ-மாணவிகளுக்கு 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள விலையில்லா மடிக்கணனி கணினியை தமிழக கால்நடைத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரிய தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார், இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுமக்கள் வைத்திற்கும் மாற்று நிறுவன செட்டாப் பாக்ஸ்சை அரசு செட்டாப் பாக்ஸ்க்கு மாற்றுவதற்கு தயக்கம் காட்டுவதாக தகவல் வந்துள்ளது, தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரியம் சார்பில் தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது, கடந்த மாதம் 23ம் தேதிக்குப் பிறகு எந்தந்த பகுதியில் அரசு செட்டாப் பாக்ஸ் ஓடியதோ, அந்தந்த வீடுகளில் மீண்டும் அரசு செட்டாப் பாக்ஸ் இணைப்பு கொடுக்கவேண்டும் என்றும், அதே நேரத்தில் அரசு நிர்ணயித்த 153 ரூபாய் மாத கட்டணத்தைவிட கூடுதலாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுமக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது, அதையும் மீறி வசூலித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேட்டியின்போது தெரிவித்தார், மேலும் கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
பேட்டி - உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரிய தலைவர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.