மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கோவை மாநகர மேற்கு மாவட்ட திமுக சார்பில், ஆத்துப்பாலத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கம் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் காதர் தலைமையில் நடந்தது. இதனை மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தொடங்கிவைத்தார். அதன் பின் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
இந்நிகழ்வில், பகுதி கழக பொறுப்பாளர் கார்த்திகேயன், குனிசை லோகு, முன்னாள் நகராட்சி தலைவர் பிரபாகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி.!