ETV Bharat / state

பாலம் கட்டும் பணியால் சாலையின்றித் தவிக்கும் பொதுமக்கள்! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் கட்டும் பணியால் முறையான சாலையின்றி பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

முறையான சாலையின்றி தவிக்கும் பொதுமக்கள்
author img

By

Published : Oct 25, 2019, 9:10 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளச்சி பாலக்காடு சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.54 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கான சாலையில், பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருதால் அதற்கான மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.

இதனால், பாலக்காடு நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வேகமாகச் சென்று வருவதால் பொதுமக்கள், குழந்தைகள், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் சாலையில் வருவதற்கு அஞ்சுகின்றனர்.

bridge work - முறையான சாலையின்றி தவிக்கும் பொதுமக்கள்

சாலை சேறும் சகதியுமாக உள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மாற்றுப்பாதை அமைத்திருந்தும் முறையான சாலையின்றி பொதுமக்கள் அவதிபட்டுவருகின்றனர்.

பாலம் கட்டும் பணியால் ஊருக்குள் மருத்துவ அவசர ஊர்தி வருவதற்கு முறையான சாலையின்றி கிராமங்களைச் சுற்றிவரக்கூடிய சூழல் உள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே, பாலம் கட்டும் பணியை வேகப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

Intro:brigeBody:brigeConclusion:பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 54 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது காவல்துறை சார்பில் மாற்றுப்பாதை அமைந்திருந்தாலும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் இதையடுத்து பாலக்காடு நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது முத்தூர் அருகே மாற்றுப்பாதை அமைத்து இருந்தாலும் வாகனங்கள் ஊருக்கு செல்வதால் பொதுமக்கள் குழந்தைகள் கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளி மாணவ மாணவர்கள் ரோடுகளில் வர அச்சப்படுகின்றனர் பாலப் பணி தொடங்கப்பட்ட நிலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அவ்வழியே செல்லும் பொழுது சேர்கள் நிறைந்து உள்ளதால் வாகனம் ஓட்ட முடியாமல் திணறுகின்றனர் மாற்றுப்பாதையில் ஆம்புலன்ஸ் செல்லமுடியாமல் கிராமங்களை சுற்றி வருவதால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வரும் வழியில் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது ஆகவே பொது மக்களின் நலன் கருதி பாலம் பணியை வேகப்படுத்தி விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.