கோயம்புத்தூர்: கோவை மாவட்ட பாஜக தலைவராகப் பதவி வகித்து வந்த பாலாஜி உத்தம ராமசாமி தன்னை பதவியிலிருந்து விடுவிக்குமாறு பாஜக மாநிலத் தலைமைக்குக் கடிதம் விடுத்துள்ளார். அவரது கடிதத்தை ஏற்றுக் கொண்ட பாஜக மாநிலத் தலைமை கோவை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவரை நியமித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோயம்புத்தூர் நகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த பாலாஜி உத்தம ராமசாமி மாவட்டத்தினை சிறப்பான முறையில் வழிநடத்தி களப்பணி ஆற்றி வந்தார். தற்பொழுது, சொந்த காரணங்களுக்காக பாஜகவின் மாவட்ட தலைவர் பதவியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார். அவருடைய கடிதத்தினை ஏற்றுக் கொண்டு இன்று (நவ.26) முதல் மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார். கோயம்புத்தூர் நகர் மாவட்ட பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த ரமேஷ்குமார் புதிய கோவை மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே வி.பி சிங்கிற்கு செய்யும் உண்மையான மரியாதை" - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!