ETV Bharat / state

அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்.. பாஜக விவசாய அணி அறிவிப்பு - கோயம்புத்தூர்

கோவையில் வருகிற 7ஆம் தேதி அன்று அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக விவசாய அணியின் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.

protest  bjp  bjp farmers wing  bjp farmers wing announced protest  Annur farmers  farmers  coimbatore  protest for support Annur farmers  bjp protest  annamalai  bjp state president annamalai  விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்  அன்னூர்  அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்  பாஜக விவசாய அணி  பாஜக விவசாய அணி அறிவிப்பு  ஆர்ப்பாட்டம்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  அண்ணாமலை  கோயம்புத்தூர்  டியூகாஸ்
அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Dec 5, 2022, 7:40 PM IST

கோயம்புத்தூர்: கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாஜக விவசாய அணியின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், பாஜக விவசாய அணியின் மாநிலத் தலைவர் ஜி.கே. நாகராஜ் பேசினார்.

அதில், “அன்னூரில் 3731.57 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த விவசாயிகளின் எதிர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் எனப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அன்னூர் விவசாயிகளின் போராட்டத்தை தமிழ்நாடு அரசு செவி சாய்க்க மறுத்தால் பாஜக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும்.

அன்னூர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த அரசு ஆணை பிறப்பித்ததை ரத்து செய்யக்கோரி டிசம்பர் 7ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் அன்னூர் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட்டு 115 குளங்கள் நிரப்பப்பட்டு விவசாயத்திற்கு அன்னூர் தயாராகும் வேளையில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்” எனக் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “வனத்தை விட்டு விவசாய நிலத்திற்குள் வரும் காட்டுப்பன்றியைச் சுட வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல் இருந்தும் தமிழ்நாடு அரசு இதுவரை காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தவோ, சுட்டுக்கொல்லவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனைக்கண்டித்து டிசம்பர் 14-ம் தேதி கோவையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும். போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் கோட்டை நோக்கி விவசாயிகள் செல்வோம்” எனக் கூறினார்.

மேலும் பேசுகையில், “துடியலூர் அருகே உள்ள டியூகாஸ் நிறுவனத்தில் 14 லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டதற்கும், மத்திய அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இது தமிழ்நாடு அரசின் செயல். அதே சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் டியூகாஸ் விவகாரத்தில் மத்திய அரசைக் காரணம் காட்டி பொய் பிரசாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கோவையில் போராட்டம் நடத்தவுள்ளோம்'' என்றார்.

அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்.. பாஜக விவசாய அணி அறிவிப்பு

இதையும் படிங்க: 'இளையராஜாவை வைத்து அரசியல்.. கனவு காணும் பாஜக' - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.