ETV Bharat / state

எங்களுக்கு பிரேக்கப்பா?.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து உண்மை உடைத்த அமீர் - பாவ்னி! - அமீர் பாவ்னி

கோவையில் தனியார் பள்ளியில் நடந்த நடன போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிக்பாஸ் தொடர் மூலம் பிரபலமான அமீர் மற்றும் பாவ்னி ஜோடி, தங்களுக்கு இன்னும் பிரேக் அப் ஆகவில்லை என்றும் இன்னும் லிவ்-இன் உறவுமுறையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 19, 2023, 10:27 AM IST

கோயம்புத்தூர் : சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் கூட்டமைப்பின் 44 வது ஆண்டு பள்ளிகளுக்கான நடன போட்டி கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள பெங்க்லென் பப்ளிக் பள்ளி (Benglen Public School) வளாகத்தில் நடைபெற்றது. அப்பள்ளியின் நிர்வாக இயக்குநர் அபிஷேக் ஜாக்சன் விழாவில் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஃப்ராங்க் டேவிட், முதல்வர் மார்கரேட் தேவ கிருபை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நடன போட்டியில் கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நடனமாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடனங்கள் அரங்கேறின. குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஆடிய நடனத்தில் இறுதியாக பாரதமாதா வெகுண்டெழுந்து குற்றவாளிகளை தண்டிப்பது போன்று தத்ரூபமாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தொடரில் பங்கேற்ற அமிர் மற்றும் பாவ்னி கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அமீர், தான் தற்போது இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக பாவ்னி நடித்து வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: Mathagam web series: அதர்வா, மணிகண்டன் நடிப்பில் மத்தகம் வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியீடு!!

மேலும் சமூக வலைத்தளங்களில் இருவரின் காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக தகவல் வைரலானது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அமீர், தாங்கள் முன்னதாக லிவ்-இன் உறவில் இல்லாத போது, ஒன்றாக இருப்பதாக தெரிவித்ததாகவும், தற்போது இரண்டு குடும்பங்களுக்கும் தெரிந்து லிவ்-இன் உறவில் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், தங்களது வாழ்க்கையில் தாங்கள் என்ன செய்தாலும் வெளியில் தெரிந்து விடுவதாகவும், பாவ்னிக்கு அறுவை சிகிச்சை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் நடிக்க பெரிய பிரேக் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார். பாவ்னி தற்போது வெப் சீரிஸ் ஒன்றிலும், தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருவதாக அமீர் கூறினார்.

இதையும் படிங்க: மறக்குமா நெஞ்சம்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மாற்று தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.