ETV Bharat / state

'தேடல் குழு' தகுதியான நபர்களைப் புறக்கணிக்கிறது - பேராசிரியர்கள் குற்றச்சாட்டு!

கோவை: தேர்வு குழுவால் தகுதியான நபர்கள் புறக்கணிக்கப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள பேராசிரியர்கள், ஆசிரியர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

author img

By

Published : Oct 13, 2019, 5:45 PM IST

bharathiyar university_

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கணபதி லஞ்சப்புகாரில் இரு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்காக "தேடல் குழு" உருவாக்கப்பட்டது. துணைவேந்தர் பதவிக்கு தகுதியான வரைமுறைகள் குறித்து தேடல் குழு பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டது.

துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 147 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து 10 பேரை தேடல் குழு தேர்வு செய்துள்ளது. இந்த 10 பேரில் இறுதிப் பட்டியலுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆளுநருக்கு பட்டியல் அனுப்பப்படும். அவர்களில் ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் தேர்வு செய்வார்.

இந்நிலையில் தேடல் குழு தேர்வு செய்துள்ள 10 பேர் கொண்ட பட்டியலில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், இதில் தகுதியற்ற நபர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டி இருக்கின்றனர். தேடல் குழுவைக் கலைக்க வேண்டுமெனவும் புதிய தேடல் குழு உருவாக்கப்பட்டு தகுதியான நபர்களை துணைவேந்தர் பதவிக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள பேராசிரியர்கள் பூபதி, கணேசன், பாலச்சந்திரன், சுரேஷ் ஆகியோர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

bharathiar-university
பேராசிரியர்கள் ஆளுநருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதம்
bharathiar-university
பேராசிரியர்கள் ஆளுநருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதம்

இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் நேரடியாக தலையிட வேண்டுமெனவும்; துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள பேராசிரியர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

வரும் 15ஆம் தேதி தேடல் குழு தேர்வு செய்துள்ள 10 பேர் கொண்ட முதற்கட்டப் பட்டியலில் இருந்து இறுதிப்பட்டியலுக்கு 3 பேரைத் தேர்வு செய்ய இருக்கும் நிலையில் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், தேடல் குழு மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்: மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியை ஃபேஸ்புக்கில் கதறல்

Intro:பாரதியார் பலகலைக்கழகத்திற்கு துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள பேராசிரியர்களும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் தேடல் குழு மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுBody:கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கணபதி லஞ்சப் புகாரில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்காக தேடல் குழு உருவாக்கப்பட்டது. தேடல் குழு துணைவேந்தர் பதவிக்கு தகுதியான வரைமுறைகளை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டது. இதனைதொடர்ந்து
தேடல் குழுவிடம் துணைவேந்தர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து மொத்தம் 147 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் விண்ணப்பங்களை சரி பார்த்து 10 பேரை தேடல் குழு தேர்வு செய்துள்ளது. இந்த 10 பேரில் இறுதி பட்டியலுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டு கவர்கனருக்கு பட்டியல் அனுப்பபடும். இவர்களில் ஒருவரை கவர்னர் துணைவேந்தராக தேர்வு செய்வார்.

இந்நிலையில் தேர்தல் குழு தேர்வு செய்துள்ள 10 பேர் கொண்ட பட்டியலில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், இதில் தகுதியற்ற நபர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், தனியார் கல்லூரியில் ஒரு வருடம் மட்டுமே முதல்வர் பணியில் இருந்த ஒருவரும் இதில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டி இருக்கின்றனர். எனவே தேடல் குழுவைக் கலைக்க வேண்டும் எனவும் புதிய தேடல் குழு உருவாக்கப்பட்டு தகுதியான நபர்களை துணைவேந்தர் பதவிக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக ஆளுநருக்கு மனு அனுப்பினர்.

இந்நிலையில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேர்வு செய்யப்பட்ட 10 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலில் தேடல் குழு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வில்லை எனவும் இறுதி பட்டியல் தயாரிப்பில் பாரபட்சம் இருப்பதாகவும், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள பேராசிரியர்கள் பூபதி, கணேசன், பாலசந்திரன், சுரேஷ் ஆகியோர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 18 பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த இருக்கக் கூடிய நிலையில் இவர்களில் ஒருவர் மட்டுமே 10 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், தகுதி உடைய பலர் நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே 147 விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களையும், மதிப்பெண் பகிர்வு உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேடல் குழு இந்த விவரங்களை வெளியிடக் கூடாது என்ற எந்த வரையறையும் கிடையாது என தெரிவித்துள்ள அவர்கள் ,தேடல் குழுவின் நடவடிக்கை பாரபட்சத்துடன் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் நேரடியாக தலையிட வேண்டும் எனவும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள பேராசிரியர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். வரும் 15 ம் தேதி தேடல் குழு தேர்வு செய்துள்ள 10 பேர் கொண்ட முதல்கட்ட பட்டியலில் இருந்து இறுதிபட்டியலுக்கு 3 பேரை தேர்வு செய்ய இருக்கும் நிலையில் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள பேராசிரியர்களும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் தேடல் குழு மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.