இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் தென் மண்டல துணை மேலாளர் ஜான் ஜோசப் மற்றும் மேலாளர் சுப்பிரமணி ஆகியோர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில் 2005ஆம் ஆண்டு முதல் பாரத தரிசன சுற்றுலா ரயில் மூலம் 370 பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சிறப்பு ரயில்களின் விவரம்:
- 12/10/2019 அன்று சிறப்பு ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை வழியாக துவாரகா வரை செல்லும்.
- தீபாவளி கங்கா சிறப்பு ரயில் 23/10/2019 அன்று மதுரையில் இருந்து புறப்பட்டு வாரணாசி வரை செல்கிறது.
- குளிர்சாதன வசதி கொண்ட முக்திநாத் தர்ஷன் சிறப்பு ரயில் 19/10/2019 அன்று திருச்சியில் இருந்து புறப்பட்டு அயோத்தி,பொக்காரா, காட்மாண்டூ செல்கிறது.
- 13/11/2019 அன்று திருச்சியிலிருந்து செல்லும் சிறப்பு ரயில் கொல்கத்தா, சிரபுஞ்சி, ஷிலாங் வரை செல்கிறது.
இந்த யாத்திரை செல்லும் அனைவருக்கும் தேவையான ஏற்பாடுகளை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள இணைய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தசரா கொண்டாட்டத்திற்கு தயாராகும் மைசூரு தர்பாரின் அரிய வகை புகைப்படங்கள்!