பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காப்பாலையம் பகுதியில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் கே.எம். நாகராஜன் ஏற்பாட்டில் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் அங்குள்ள ஏழை மக்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர். அச்சமயம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேய நாகராஜன் என பலர் உடன் இருந்தனர்.
இதேபோல் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொள்ளாச்சி நகராட்சி 36 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி அன்னை கஸ்தூரிபாய் வீதியில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் வீதி வீதியாக சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.