கோயம்புத்தூர்: வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களில் பலர் 7 மலை ஏறி சிவனை வழிபடுவர், சிலர் அடிவார கோயிலிலேயே சாமி தரிசனம் செய்து செல்வர்.
தற்போது அதிகப்படியான வட மாநில மக்கள் இக்கோயிலுக்கு வருகை புரிகின்றனர். மேலும், இந்த கோயிலின் அடிவாரப் பகுதியில் அன்னதான கூடமும் அமைக்கப்பட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கோயில் வளாகத்தில் தனியார் அமைப்பின் பங்களிப்புடன் இந்தி மொழியில் அன்னதான கூடத்திற்குச் செல்லும் வழி என வழிகாட்டு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகத்தினரிடம் கேட்கையில் தற்போது இக்கோயிலுக்கு அதிகப்படியான வட மாநிலத்தவர்கள் வருகை புரிவதாகவும், அவர்கள் அன்னதான கூடத்திற்குச் செல்லும் வழி தெரியாமல் சுற்றி வருவதால் அவர்களுக்குத் தெரிந்த இந்தி மொழியில் வழிகாட்டு பதாகை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சித்திரை திருவிழா: வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளிய மீனாட்சி