ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு - தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து அக்.31-ல் பந்த் அறிவிப்பு

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கையும், பயங்கரவாதத்தை மூடி மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் கண்டித்து கோவை மாநகரில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி பந்த் நடத்த முடிவு செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Oct 26, 2022, 10:41 PM IST

கோயம்புத்தூர்: சித்தாபுதூர் பகுதியிலுள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கி இருக்கிறது என்பதை கார் வெடிப்பு சம்பவம் காட்டியுள்ளது. 1998ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் போல, மீண்டும் நடக்க இருந்த சம்பம் அதிர்ஷ்டவசமாக நடக்கவில்லை.

கோட்டை ஈஸ்வரனால் கோவை காக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த உடன் டிஜிபி வந்ததை வரவேற்கிறோம். ஆனால், முதற்கட்ட விசாரணைகூட முழுமையாக செய்யாமல் காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது என அறிக்கை விட்டது பொறுப்பான செயல் அல்ல. அவர், ஏன் வெடித்தது என்பதில் கருத்தைச்செலுத்தி இருக்க வேண்டும்.

இதில், உயிரிழந்த நபரை முழுமையாக கண்காணித்து இருக்கவேண்டும். அவரை உளவுத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், இடையில் அது தோல்வியடைய என்ன‌ காரணம்? 3 நாள்களுக்குப் பிறகு தூக்கத்தில் இருந்து விழித்தவர் போல இன்று முதலமைச்சர் அறிக்கை விட்டுள்ளார்.

பிஎப்ஐ அமைப்பினர் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசினர். அதனை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. ஏற்கெனவே நடவடிக்கை எடுத்திருந்தால் இதேபோல செய்ய தைரியம் வந்திருக்காது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும்.

காவல் துறையில் அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும். டிஜிபி அவசர கோலத்தில் அறிக்கை தர திமுக அழுத்தம் தான் காரணம். எங்களுக்குக்கிடைத்த தகவலின்படி 1.5 டன் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. உண்மையை மூடி மறைக்காமல் வெளிக்கொண்டு வரவேண்டும். முழுமையாக பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தொடர்புகள் மாநிலத்தை தாண்டியும் இருப்பதால் முழுமையாக கண்டறிய, என்.ஐ.ஏ. உடன் அரசு இணைந்து செயல்பட வேண்டும்.

கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில், கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கையும், பயங்கரவாதத்தை மூடி மறைக்க வேண்டுமென்ற எண்ணத்தை கண்டித்தும், கோவையை பயங்கரவாதிகளிடம் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் பந்த் நடத்தப்படும்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்

நல்ல உள்ளம் கொண்டவர்கள் இந்தப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் கார் வெடித்த வழக்கு: 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.