ETV Bharat / state

Viral Audio... கிருஷ்ண ஜெயந்திக்கு குழந்தைகளை வேடமணிந்து வரக்கூறிய ஆசிரியர்கள்.. திராவிடர் கழகம் எதிர்ப்பு

கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு குழந்தைகள் வேடமணிந்து வரவேண்டுமென பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் உரையாடிய ஆடியோ வைரலாகி வருகிறது.

Etv Bharat குழந்தைகளை வேடமணிந்து வர கூறும் ஆசிரியர்கள்

author img

By

Published : Aug 17, 2022, 6:36 PM IST

Updated : Aug 18, 2022, 2:37 PM IST

கோயம்புத்தூர்: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து வர வேண்டும் என ஆசிரியர் பெற்றோர்களிடம் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து இதற்குக் கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மாநகரச் செயலாளர் சாஜித் தலைமையில் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டது.

மனு அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்

இதுகுறித்துப் பேசிய சாஜித், “அனைத்து மதத்தினரும் படிக்கும் பள்ளிகளில் மதச்சார்பின்மையை போதிக்கும் அவ்வாறான இடங்களில், இது போன்று ஒரு மதத்தினரை சார்ந்து நடத்தும் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. இதன்மூலம் பெற்றோர்களுக்கு பொருளாதார பாரத்தையும் தரக்கூடாது” என்றார்.

குழந்தைகளை வேடமணிந்து வரக் கூறிய ஆசிரியர்கள்

தொடர்ந்து பேசிய அவர், ’’இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இன்று மாலைக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புகிறோம்’’ எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கல்வித்தொலைக்காட்சி விவகாரத்தில் அரசாங்கமும், நானும் ஏமாந்துவிடமாட்டோம்... டிரெண்டிங் குறித்து அன்பில் மகேஷ்

Last Updated : Aug 18, 2022, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.