கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி சித்ரா நகரைச் சேர்ந்தவர் துரைசாமி (70). இவர், தனக்கு சொந்தமான தோட்டத்தை விற்று ரூ.30 லட்சம் பணமும் பத்து பவுன் நகையும் வீட்டின் பீரோவில் வைத்துவிட்டு செப்டம்பர் 2ஆம் தேதி அன்று உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார்.
இந்நிலையில், திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.30 லட்சம் பணம், பத்து பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த காவல்துறையினர் வீட்டில் உள்ள கை ரேகைகளை பதிவு செய்து கொண்டு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி நகையை கொடுத்து நகை வாங்கிய இரு பெண்கள் கைது