கோவை மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த அய்யாவு (55). இவர் போளுவாம்பட்டி வனச்சரகம் எல்லை பகுதியில் ஓடும் நொய்யல் ஆற்றின் கரையில் இருக்கும் தனியார் தோட்டத்தில் காவல் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு எப்போதும்போல பணியில் அய்யாவு இருந்துள்ளார். சுமார் 8 மணியளவில் அப்பகுதி வழியாக வந்த காட்டுயானை ஒன்று அவரை தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த காருண்யா காவல் காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு வந்து அய்யாவு உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்று காலை உடற்கூறாய்வு முடிந்ததும் அவர் குடும்பத்தாருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் பாருங்கள்: கோடோி கிராமத்தில் புகுந்த காட்டுயானையால் மக்கள் அச்சம்!