கோவை: தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்று. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி சட்டசபையில் கேள்வி நேரத்தில் அறநிலையத்துறை சார்பில் மாசாணி அம்மன் கோயிலில் அதிக நிதி இருக்கிறது. ஆதலால் ஒரு கலை கல்லூரி கட்ட வேண்டும், பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படுமா என அமைச்சரிடம் கேட்டபோது ரூ.4 கோடியே 50 லட்சத்தில் கோயிலில் பல்வேறு பணிகள் நிறைவுற்றதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையடுத்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் மாசாணியம்மன் கோயில் சுற்றுச்சுவர், படித்துறைகள் பணிகள் நடைபெறுகிறதா என நேரில் சென்று இன்று பார்த்தபோது எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை எனவும் தவறான தகவலை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தெரிவித்துள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜி.கே.சுந்தரம், கார்த்திக் அப்புசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்த 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்