கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்திலிருந்து 22 விமானங்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் சர்வதேச அளவில் இரண்டு விமானங்கள் இயக்கப்படுகிறது. காலையில் ஏர் அரேபியா என்ற விமானமும், மாலையில் சிங்கப்பூர் செல்லும் விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று(ஜன.2) கோவையில் இருந்து காலை 7:17 மணியளவில் சார்ஜாவிற்கு செல்லும் ஏர் அரேபியா விமானம் கிளம்பியது. அப்போது ஓடுதள பாதையில் இருந்து மேல் நோக்கி விமானம் உயர்த்தப்பட்ட நிலையில் சிறிது உயரத்திலேயே விமானத்தின் இடது பக்க இஞ்சினில் இரண்டு பறவைகள்(கழுகுகள்) மோதியது. இதனால் பாதுகாப்பு கருதி விமானம் உடனடியாக கோவை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
உடனடியாக பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு இன்ஜின் பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இரண்டு கழுகுகள் மோதியதில் ஒரு கழுகு பிளேட்டில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இஞ்சின் முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட பின்பு விமானம் புறப்படும் என தெரிவிக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கோவை விமான நிலையத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது..
இதையும் படிங்க:பாலியல் வழக்கில் சிக்கிய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜினாமா