ETV Bharat / state

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு! - tn agri university news

ஜூலை 1ஆம் தேதிக்குள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூறப்பட்ட நிலையில் ஜூலை 15ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பம் சமர்ப்பித்தற்கான தேதி நீட்டிப்பு!

author img

By

Published : Jul 2, 2023, 10:50 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை பல்கலைக்கழகம் கூறியுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில் வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை மே 10 ஆம் தேதி முதல் தொடங்கியிருந்தது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு கல்வி நிர்வாகங்களும் இணைந்து, நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாணவர் சேர்க்கையினை தொடங்கியிருந்தது.

நடப்புக் கல்வியாண்டில் வேளாண் பல்கலையின் 14 பட்டப் படிப்புகளுக்கும் (UG), 3 பட்டயப் படிப்புகளுக்கும் (DIPLOMA), மீன்வளப் பல்கலையின் 6 பட்டப் படிப்புகளுக்கும் (UG), 3 தொழில்முறை பாட பிரிவுகளுக்கும் (B.voc.programs) ஒருமித்தவாறு ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ ஆகிய மூன்று பிரிவினருக்கு ரூபாய் 250, இதர அனைத்து பிரிவினர்களுக்கும் ரூபாய் 500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை (ஆங்கில வழி, தமிழ் வழி), தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு (டிப்ளமோ) தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழியில் (www.tnagfi.ucanapply.com) விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் ஜூன் 9 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி... திமுக எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் - ஈபிஎஸ் கண்டனம்!

இதனையடுத்து இனையதலம் மூலமாக விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பழ்கலைக்கழகங்களிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து விண்ணப்பத்தை பதிவேற்றுவதற்கான கடைசி தேதி வருகின்ற 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை பல்கலைக்கழகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சமர்ப்பிக்குமாறும், விண்ணப்பங்களை www.tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், 0422-8611345, 0422-6611346, 9488635077, 9486425076 என்ற தொலைபேசி உதவிச் சேவை எண்களிலும் ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் (gmail) மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. வாரநாட்களில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவை ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு புதிய கார் புக்கிங் பணிகள் நிறைவு - வாயைப் பிளக்கவைக்கும் விலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.