கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் சிஏஏ கருத்தரங்குக்காக டெல்லி சென்று வந்த ஏழு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு கோவை சிஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் வசித்த பகுதிகளை அரசுத்துறை அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வசித்து வரும் பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தினர், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளித்தனர்.
அப்பகுதி மக்கள் வெளியே வராத வண்ணம் ஒலிபெருக்கி மூலம் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காளியாபுரம், வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை, கோட்டூர் செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களிடம் போனில் ஆறுதலாக பேசிய அமைச்சர்!