ETV Bharat / state

கோவையில் தொடர்ந்து நடைபெறும் மேம்பால விபத்து - மக்கள் அச்சம்! - கோவை மேம் பாலம்

கோவையில் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகளால் கோவை மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவையில் தொடர்ந்து மேம்பால விபத்து
கோவையில் தொடர்ந்து மேம்பால விபத்து
author img

By

Published : Jul 20, 2022, 5:55 PM IST

கோவையில் திருச்சி சாலை மேம்பாலம் திறக்கப்பட்டு சுமார் ஒன்றரை மாத காலம் ஆகிறது. ஏற்கெனவே அம்மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர், அதிவேகம் காரணமாக பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி, மேல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து மேம்பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இருப்பினும் வேகத்தடைகள் அமைக்கப்பட்ட சில தினங்களிலேயே மீண்டும் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று(ஜூலை20) கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச்சென்ற இரண்டு கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்றபோது மேம்பாலத்தில் சுங்கம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகளை பின்னால் வந்த வெள்ளை நிற கார் ஓட்டுநர் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. வேகத்தடைக்கு மிக அருகில் வேகத்தடையை கண்டு திடீரென பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறிய நிலையில் சென்று முன்னர் சென்ற சிவப்பு நிற கார் மீது மோதினார்.

கோவையில் தொடர்ந்து மேம்பால விபத்து

இதில் காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் கார்களை வாகனங்கள் தூக்கி செல்லும் வாகனங்களை கொண்டு எடுத்துச்சென்றனர். இதுகுறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மேம்பாலத்தில் தொடர் விபத்துகள் நடைபெற்று வருவது கோவை மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதையும் படிங்க:Breaking: அண்ணா பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.