ETV Bharat / state

இறந்த மனைவியை நினைத்து காகத்திற்கு உணவிடும் முதியவர்! - crow

பொள்ளாச்சி அருகே இறந்த மனைவியை நினைத்து காகத்திற்கு தினமும் முதியவர் உணவளித்து வருகிறார்.

பொள்ளாச்சியில் இறந்த தன் மனைவியை நினைத்து காகத்திற்கு உணவிடும் முதியவர்

author img

By

Published : Jun 8, 2022, 10:16 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நகர்ப்புற பகுதி மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் சுந்தரம் (57) என்பவர் சாலையோரம் டீ கடை நடத்தி வருகிறார். பகலில் டீக்கடையும் இரவில் தனியாருக்கு சொந்தமான அப்பார்ட்மெண்டில் வாட்ச்மேன் வேலையும் செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரின் மனைவி பாப்பாத்தி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஆதரவு தர யாரும் முன்வராததால் தன் சொந்த முயற்சியில் நண்பர்கள் உதவியுடன் டீ கடையை பத்து வருடங்களாக நடத்தி வருகிறார்.

காகத்திற்கு உணவிடும் முதியவர்

தனது கடையில் தினமும் காலை போண்டா போடும் பொழுது காகங்கள் இவரை சூழ்ந்து கொள்கிறது. முதியவர் தினசரி தன் மனைவி பாப்பாத்தியை நினைத்து காகத்திற்கு உணவு அளித்து வருகிறார்.

தற்பொழுது இவர் இருக்க வீடு இல்லாமல் தான் வாட்ச்மேன் வேலை செய்யும் இடத்தில் இரவில் தங்கி கொள்கிறார். இவருக்கு மறைந்த பாதிரியார் ஒருவர் தமிழ்நாடு அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகையை பெற்றுத் தந்துள்ளார். தமிழ்நாடு அரசு தனக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: 'சாதிய அமைப்புகளை அண்ணாமலை தூண்டுகிறாரா?' - முத்தரையர் முன்னேற்ற சங்கத்தலைவர் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.