ETV Bharat / state

புற்றுநோய் பாதித்த சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! - Ambulance driver saved the life of cancer boy in coimbatore

கோவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிரை காப்பாற்ற உரிய நேரத்தில் உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பலரும் பாராட்டிவருகின்றனர்.

ambulance
ambulance
author img

By

Published : Dec 28, 2019, 6:48 PM IST

கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்தவர் மகேந்திரன்(25). ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவர், அவ்வப்போது விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாதவர்களுக்கு துரை அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்துவருகிறார்.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 14 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிப்படைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுவனை மேல் சிகிச்சைகாக சென்னையிலுள்ள கேன்சர் சென்டருக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். சிறுவனை சென்னை கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸ் தேவைப்பட்டுள்ளது. ஆனால், பணம் இல்லாததால் பெற்றோர் செய்வதறியாது நின்றுள்ளனர்.

இந்நிலையில், துரை அறக்கட்டளை மகேந்திரன் குறித்து சிறுவனின் உறவினர் கேள்விப்பட, அவரை தொடர்புகொண்டு குடும்ப சூழலை எடுத்து கூறியுள்ளார். இதையடுத்து, சிறுவனுக்கு உதவும் வகையில் மகேந்திரன் ஆம்புலன்ஸை இலவசமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

புற்று நோய் பாதித்த சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
இதையடுத்து, நேற்று நள்ளிரவு புறப்பட்டு இன்று காலை 8 மணியளவில் சென்னை அடையாறு கேன்சர் சென்டருக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் வந்தடைந்தார். மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அபாய கட்டத்தை அவர் தாண்டியுள்ளார். உரிய நேரத்தில் சிறுவனை காப்பாற்ற உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மகேந்திரனுக்கு சிறுவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மகேந்திரன், "எனக்கு சொந்தமாக நான்கு ஆம்புலன்ஸ்கள் உள்ளன. விபத்தில் சிக்கியவர்களை அவ்வப்போது மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதுடன், அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: பிச்சைக்காரர்களுக்குள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு!

Intro:சிறுவனின் உயிரைக் காப்பாற்ற கோவையிலிருந்து சென்னைக்கு இலவசமாக மின்னல் வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ், சிறுவனின் உயிரைக் காப்பாற்ற இலவசமாக ஆம்புலன்ஸ் தந்து உதவிய 25 வயது இளைஞருக்கும் பொதுமக்களிடையே வாழ்த்துக்கள் குவிகிறதுBody:கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்தவர் மகேந்திரன் 25 வயதான இவர் அன்னூர் பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். மேலும் அவ்வப்போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் பெறவும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாத அவர்களுக்கும் அவரது துரை அறக்கட்டளை மூலம் முடிந்த பல்வேறு உதவிகளை செய்துவருகிறார் இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த ரஞ்சித் என்ற 14 வயது சிறுவன் புற்றுநோய் பாதிப்பால் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இவரை மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள நியூ அடையார் கேன்சர் சென்டருக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அவரை கொண்டு செல்வதறகு ஆம்புலன்ஸ் தேவைப்பட்டது. இந்த சூழலில் கையில் பணம் இல்லாததால் ரஞ்சித்தின் பெற்றோர்கள் தவித்து வந்தனர் இந்நிலையில் துரை அறக்கட்டளை மகேந்திரன் குறித்து கேள்விப்பட்ட
சிறுவனின் உறவினர் ஒருவர் மகேந்திரனை தொடர்பு கொண்டு சிறுவனின் குடும்ப சூழலை எடுத்து கூறியுள்ளார்.இதனையடுத்து மகேந்திரன் சிறுவனுக்கு உதவி செய்ய முன் வந்து கோவையில் இருந்து சென்னைக்கு தனது ஆம்புலன்ஸை இலவசமாக அனுப்பி வைப்பதாக கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தார் சிறுவன் ரஞ்சித்தை நள்ளிரவு ஒரு மணிக்கு கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி ஆம்புலன்ஸ் பயணமானது காலை 8 மணி அளவில் சென்னை அடையாறு கேன்சர் சென்டரை அடைந்தவுடன் சிறுவனுக்கு உடனடியாக மேல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து சென்னைக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்து தனது மகனின் உயிரை காப்பாற்றுவதற்காக சிறுவனின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர் இதுகுறித்து மகேந்திரன் கூறுகையில் தேனி மற்றும் அன்னூரில் ஆம்புலன்ஸ் இயக்கி வருவதாகவும் தனக்கு சொந்தமான 4 ஆம்புலன்ஸில் விபத்தில் சிக்கியவர்களை அவ்வப்போது மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதுடன் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு பணம் ஏதும் இல்லாமல இருந்தால் அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதாகவும் அதுபோல்தான் இந்த சிறுவனுக்கும் சென்னை வரை இலவசமாக ஆம்புலன்சை அனுப்பி வைத்ததாக தெரிவித்தார் மகேந்திரன்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.