கோவை ஆனைகட்டி பகுதியில் நேற்று 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, வாயில் காயம் ஏற்பட்டு உணவு உண்ண முடியாமல் தவித்துவந்துள்ளது. தகவலறிந்து வனத் துறையினர் மருத்துவக் குழுவினருடன் இணைந்து வலி நிவாரண மருந்துகளை பழங்களில் வைத்து அளித்துள்ளனர். இவர்கள் அளித்த தீவிரச் சிகிச்சைக்குப் பிறகு நேற்று முன்தினம் (ஜூன் 20) மாலை யானையின் உடல்நிலையில் முன்னெற்றம் அடைந்துள்ளது.
ஆனால், திடீரென்று நேற்று (ஜூன் 21) காலை 9 மணியளவில் மீண்டும் யானை சோர்வடைந்து ழே படுத்துள்ளது. அதன்பின்னர், அங்குவந்த மருத்துவக் குழுவினர் குளுக்கோஸ் சத்து நிறைந்த மருந்துகள் அடங்கிய 25 பாட்டில்கள், வலி நிவாரணிகளான சத்து மருந்துகள் ஆகியவற்றை ஊசிகள் மூலம் யானைக்குச் செலுத்தியுள்ளனர். ஆனாலும் யானையில் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போனது. இச்சூழலில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து மருந்துவர்கள் தரப்பில் கூறுகையில், "யானையின் வாயில் பற்களுக்கிடையில் மூங்கில் அல்லது ஏதேனும் ஒரு மரத்தின் குச்சி குத்தியால் சீல் பிடித்துள்ளது. இதனால்தான் யானை கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக உணவு உண்ணாமல் மிகவும் சோர்வடைந்து, உயிரிழந்தது" எனத் தெரிவித்தனர்.