கோயம்புத்தூர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுகவினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது சிலைக்கும், புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூர் அவிநாசி சாலை அருகே அண்ணா சிலை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அம்மன் அர்ச்சுணன, சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராம், கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
அவரின் சாதனைகளை நினைவுகூர்ந்து போற்றுவதோடு,மக்களுக்கான அவரின் சேவைகளையும்,தியாகங்களையும் என்றென்றும் நெஞ்சில் நிறுத்தி,அவரின் முழுஎண்ணங்களையும், மாண்புமிகு அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையில் நிறைவேற்ற உறுதியேற்போம்!(2/2) #HBD_தலைவா #MGR106 @EPSTamilNadu @AIADMKOfficial
— SP Velumani (@SPVelumanicbe) January 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">அவரின் சாதனைகளை நினைவுகூர்ந்து போற்றுவதோடு,மக்களுக்கான அவரின் சேவைகளையும்,தியாகங்களையும் என்றென்றும் நெஞ்சில் நிறுத்தி,அவரின் முழுஎண்ணங்களையும், மாண்புமிகு அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையில் நிறைவேற்ற உறுதியேற்போம்!(2/2) #HBD_தலைவா #MGR106 @EPSTamilNadu @AIADMKOfficial
— SP Velumani (@SPVelumanicbe) January 17, 2023அவரின் சாதனைகளை நினைவுகூர்ந்து போற்றுவதோடு,மக்களுக்கான அவரின் சேவைகளையும்,தியாகங்களையும் என்றென்றும் நெஞ்சில் நிறுத்தி,அவரின் முழுஎண்ணங்களையும், மாண்புமிகு அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையில் நிறைவேற்ற உறுதியேற்போம்!(2/2) #HBD_தலைவா #MGR106 @EPSTamilNadu @AIADMKOfficial
— SP Velumani (@SPVelumanicbe) January 17, 2023
இதனைத் தொடர்ந்து இதய தெய்வம் மாளிகையில் எம்ஜிஆர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “எம்ஜிஆர்-ன் எண்ணங்களை எடப்பாடியார் தலைமையில் நிறைவேற்ற உறுதி ஏற்போம்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘என்னை நம்பி கெட்டவர்கள் இல்லை’ - எம்ஜிஆர் வசனங்களை நினைவு கூர்ந்த சத்யராஜ்