கோயம்புத்தூர்: மாவட்ட ஊரக உள்ளாட்சியில் அதிக இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.
நடந்தமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 17 ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளில், அதிமுக 12 இடங்களையும், திமுக ஐந்து இடங்களையும் கைப்பற்றியிருந்தன. மேலும் 155 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 90 இடங்களையும், திமுக 56 இடங்களையும் சுயேச்சைகள் 9 இடங்களையும் பிடித்திருந்தன.
மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக் குழுத் தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில், அதிமுக வேட்பாளர் சாந்திமதி போட்டியின்றி ஒருமனதாக மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாந்திமதி, ஏற்கனவே அதிமுக சூலூர் ஒன்றிய துணைச் செயலாளர் பதவி வகித்துவந்துள்ளார், மேலும் இவர் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த நர்மதா துரைசாமி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்
- காரமடை ஒன்றியக் குழுத் தலைவராக மணிமேகலை போட்டியின்றி தேர்வாகியுள்ளார்
- அன்னூர் ஒன்றியக்குழு தலைவராக அம்பாள் பழனிசாமி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்
- பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக் குழுத் தலைவராக விஜயராணி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்
- கிணத்துக்கடவு ஒன்றியக் குழுத் தலைவராக நாகராணி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்
- தொண்டாமுத்தூர் ஒன்றியக் குழுத் தலைவராக மதுமதி விஜயகுமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்
- எஸ்எஸ் குளம் ஒன்றியக் குழுத் தலைவராக கவிதா 3 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
- சூலூர் ஒன்றியக் குழு தலைவராக முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜி பாலசுந்தரம் 8 வாக்குகள் பெற்று வெற்றிகண்டுள்ளார்
- சுல்தான்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவராக ரத்தினம் ஏழு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
- ஆனைமலை ஒன்றியக் குழுத் தலைவராக சாந்தி 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
- மதுக்கரை ஒன்றியக் குழுத் தலைவராக உதயகுமாரி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்
- பொள்ளாச்சி தெற்கு ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த லட்சுமி என்பவர் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்