முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்தநாள் விழா இன்று (ஜன.17) தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், அதிமுக கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
பின்னர், மத்திய பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் பொதுமக்களுக்கும், அதிமுக தொடண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. ஊர்வலத்தின்போது எம்.ஜி.ஆரின் புகழைப்பற்றி முழக்கம் எழுப்பப்பட்டது. இதில், அதிமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்தநாள்: காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கொண்டாட்டம்!