கோயம்புத்தூர்: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதியின் இணைய தளம் தொடக்க விழா பந்தய சாலையில் உள்ள சக்தி குழும அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, "பல விழிப்புணர்வு கார்ட்டூன்கள் வரைந்து அசத்திவருகிறார் கார்ட்டூனிஸ்ட் மதி. குடிநீர் வணிகமாக உள்ளது. அது இன்னும் வணிகமாகக் கூடாது என்றால் அதை நாம் சேமித்துவைக்க வேண்டும்.
அடுத்ததாக என்னுடைய படம் டாக்டர் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. எனக்கு திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்பதே ஆசை. முதல் டிக்கெட் வாங்குவதில் இருக்கும் விருப்பம் அனைவரிடமும் உள்ளது. புது விஷயங்களைப் புகுத்திவருகிறார்கள். ஓடிடி புது யுக்தி. இந்தச் சமயத்தில் படம் வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: அஜித் சந்தித்த உலகப் பிரபலம்!