கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று காந்திபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசி இருந்தார். மேலும் பெண்கள் குறித்தும் அவமதித்து பேசியதாக சமூக வலைதளங்களில் காணொலி வேகமாகப் பரவியது.
இதையடுத்து தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியன் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ராதாரவி மீது பெண்களை அவமதித்தல் (IPC 509) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.