ETV Bharat / state

"பெண் ஊடகவியலாளர்களை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"- மாதர் சங்கத்தினர்!

author img

By

Published : Aug 15, 2020, 7:45 PM IST

கோவை: பெண் ஊடகவியலாளர்களை அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

மாதர் சங்கத்தினர்
மாதர் சங்கத்தினர்

பெண் ஊடகவியலாளர்களின் முகநூலில் அவதூறாகப் பேசிய நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராதிகா, "தமிழ்நாட்டில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பத்திரிகையாளர்களாக இருக்கின்றனர். மக்களின் பல்வேறு பிரச்சனைகளை அவர்களும் வெளிக்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று மக்கள் சேவையாற்றும் பெண்களைச் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஒரு சில நபர்கள் அவதூறாகப் பதிவு செய்து வருகின்றனர். இந்துத்துவா மற்றும் சாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் பொது நோக்கத்திற்காகச் செயல்படும் பெண்களின் உயிருக்கு அவமானத்தையும், பயத்தையும் உருவாக்குகிறது. இதை சசிக்குமார் என்பவர் அவரது முகநூலில் பெண் ஊடகவியலாளர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் ஆபாச வார்த்தைகளைப் பதிவு செய்து அவமதித்து உள்ளார். எனவே அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.