கோவை: தடாகம் அருகே ராகவேந்திரா நகரில் காட்டு யானை ஒன்று மலையிலிருந்து இறங்கி சாலையைக் கடந்து சென்றது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக யானை சாலையை கடக்கும்வரை பொறுமையாக இருக்கும்படி அவ்வழியாக வாகனங்களில் வந்தோரை எச்சரித்தனர்.
பின்னர் யானை சாலையை கடந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. தகலவறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அரிதாக நள்ளிரவு நேரங்களில் இப்பகுதிக்குள் நுழையும் யானை, மாலை நேரத்திலேயே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானை குடியிருப்புக்குள் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - சிதைவு பாகங்கள் சேகரிப்பு