ETV Bharat / state

கும்கி யானைகளின் தலைவன் ‘கலீம்’ - தோல்வியே சந்திக்காத கலீமின் கதை! - கோவை செய்திகள்

காட்டு யானைகளுக்கு சிம்மசொப்பனம், கும்கி யானைகளின் தலைவன்; ஓய்வு பெற்ற கும்கி யானை கலீம் குறித்த நெகிழ்ச்சியான சிறப்பு செய்தி தொகுப்பைக் காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 16, 2023, 10:14 PM IST

கும்கி யானைகளின் தலைவன் ‘கலீம்’

கோயம்புத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதிகள், காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் உள்ளன. அதில், வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர்ச்சேதம் மற்றும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இவ்வாறு கிராமப்பகுதிக்குள் நுழைந்து தொடர்ச்சியாக சேதங்களை ஏற்படுத்தும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், பிடித்துச் சென்று வேறு பகுதியில் விடவும் கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கும்கி யானைகள் முதுமலை மற்றும் ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

முதுமலை யானைகள் முகாமில் 28 யானைகளும், கோழிகமுத்தி யானைகள் முகாமில் 26 யானைகளும் இருந்தாலும், கும்கி யானை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, கலீம் தான். காட்டு யானைகளை விரட்டுவதிலும், பிடிப்பதிலும் தேர்ச்சிப் பெற்ற இந்த யானையின், ஆஜானுபாகுவான தோற்றமும், நீண்ட தந்தங்களும் காட்டு யானைகளை அச்சம் கொள்ளச் செய்யும். அதன் காரணமாக கலீம் கும்கி யானை தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் சென்று காட்டு யானைகளைப் பிடிக்கவும், விரட்டவும் செய்துள்ளது.

1970 கால கட்டங்களில் ஆனைமலை அருகேயுள்ள டாப்சிலிப் பகுதியில் மரங்களை சுமந்து செல்ல யானைகளின் தேவை அதிகமாக இருந்த சூழலில், கடந்த 1972ஆம் ஆண்டு சத்தியமங்கலம் அருகேயுள்ள ஹாசனூர் வனப்பகுதியில் 7 வயதில் தாயைப் பிரிந்து தனியாகச் சுற்றி வந்த காட்டு யானை பிடித்து வரப்பட்டது. அதற்கு 'கலீம்' எனப் பெயர் சூட்டி டாப்சிலிப் யானைகள் முகாமில் கும்கி பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்குப் பயிற்சி அளித்த பழனிச்சாமி என்பவர் அந்த யானைக்கு பாகனாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அவரது மருமகன் மணி பாகனாக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் மரங்களை சுமந்து செல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்ட கலீம் யானை, அப்பகுதியில் மரங்கள் வெட்ட தடை விதிக்கப்பட்ட பிறகு, ஊருக்குள் புகுந்து, பயிர்ச் சேதம் ஏற்படுத்தும் காட்டு யானைகளை பிடிக்க பயன்படுத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளுக்குச் சென்று காட்டு யானைகளை விரட்டுதல், பிடித்தல் உள்ளிட்ட 99 ஆப்ரேசன்களை வெற்றிகரமாக கலீம் யானை செய்துள்ளது. கலீம் யானையைக் கொண்டு பிடித்து வரப்பட்ட சின்னத்தம்பி, அரிசி ராஜா உள்ளிட்ட பல யானைகள் கோழிகமுத்தி முகாமில் கும்கி யானைகளாக உள்ளன.

"கலீமின் முக்கிய ஆப்ரேசன்கள்" - கடந்த 2013ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் ஊருக்குள் நுழைந்த 6 காட்டு யானைகளை பிடிக்க கலீம் யானை பெரும்பங்காற்றியது. அதேபோல ஆந்திர மாநிலம், திருப்பதி தேவஸ்தானம் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளைப் பிடிக்கும் பணியில் கலீமின் பங்கு அதிகம்.

"பாகன் மணி" - காட்டு யானைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கலீம் யானை, பாகன் மணியிடம் சிறு குழந்தை போலவே இருந்து வருகிறது. மணி தன் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே கலீமை நினைத்து வருகிறார். கூடுதல் கவனிப்பும், அக்கறையும் காட்டிய மணியிடம், கலீம் அன்போடு பழகி வருகிறது. ஒருமுறை காட்டு யானையின் தாக்குதலில் இருந்து மணியின் மனைவியையும், தீவனம் எடுக்கச்செல்லும் போது புலியிடம் இருந்து மணியையும் கலீம் காப்பாற்றியுள்ளது. சில கும்கி யானைகள் காட்டு யானையின் ஆக்ரோசத்தை கண்டு அச்சம் கொண்டு பின் வாங்கும்.

ஆனால், கலீம் எந்த காட்டு யானையையும் கண்டு அச்சம் கொள்ளாமல் துணிந்து விரட்டும். பிடிக்கப்பட வேண்டிய ஒற்றை காட்டு யானை, யானைக் கூட்டத்தில் சேர்ந்தாலும் அதனைக் கண்டறியும் தன்மை கொண்டது, கலீம். 'மற்ற யானைகள் மதம் பிடிக்கும் தருவாயில் இருந்தாலே அதன் பாகன்கள் அருகில் செல்ல அச்சம் கொள்வார்கள். ஆனால், கலீம் யானை மதம் பிடிக்கும் காலத்திலும் தன்னுடைய சொல்லுக்கு கட்டுப்படும். அதே நேரத்தில் ஆப்ரேசன்களிலும் பயன்படுத்த முடியும்' என பாகன் மணி தெரிவித்துள்ளார்.

மேலும் ’இந்த யானைக்காக வெளியூர் பயணத்தை தவிர்ப்பதாகவும்; தான் பொள்ளாச்சி சந்தைக்கு சென்றுவிட்டு வரும்போது என்னுடைய குழந்தைகளுக்கு உணவு பண்டங்கள் வாங்கி வரும்போது கலீமுக்கும் வாங்கி வருவேன்; என்னுடைய பேரக் குழந்தைகள் கலீம் யானையை தாத்தா என்றே அழைப்பார்கள்; யானை மீது அமர்ந்தால் என்னையே அறியாமல் ஒரு தைரியம் வரும்; எதிர்த்து வரும் காட்டு யானைகளை சுலபமாக கையாள எனக்கும் பெரும் தைரியம் கொடுப்பதும் கலீம் தான். இதன் தைரியத்தில் 99 ஆப்ரேசன்கள் வெற்றிகரமாக செய்துள்ளோம்’ எனத் தெரிவித்தார், பாகன் மணி.

இந்த நிலையில் 99 ஆப்ரேசன்கள் செய்த கலீம் யானைக்கு 60 வயது ஆனதால், வனத்துறையினர் ஓய்வு அளித்துள்ளனர். கோழிகமுத்தி யானைகள் முகாமில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனப்பணியாளர்கள், ஓய்வு பெற்ற கலீம் கும்கி யானைக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். அப்போது கலீம் யானை தும்பிக்கையை தூக்கி பிளிறியது. கலீம் யானைக்கு வனத்துறையினர் பிரியா விடை கொடுத்தனர்.

100ஆவது ஆப்ரேசனுக்காக கலீம் பிறந்த ஹாசனூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள தாளவாடி கிராமப்பகுதியில் கருப்பன் என்ற காட்டு யானை அதிக அளவில் பயிர் சேதம் செய்த நிலையில், அதனை பிடிக்க கலீம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், உரிய கால நேரம் கிடைக்காததால் நூறாவது ஆப்ரேசனை செய்ய முடியாமல் டாப்சிலிப் திரும்பிய நிலையில் கலீம் ஓய்வுபெற்றது பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க: தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்: பெற்றோரை தத்தெடுத்த யானை குட்டிகள்.. ஆஸ்கர் வென்ற தமிழ் காவியம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.