ETV Bharat / state

சர்க்கரை நோய் விழிப்புணர்வு - புத்தகத்தை வெளியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி - புத்தக வெளியிட்டு விழா

கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவர் எஸ். வேலுமணி - ஜெயலஷ்மி தம்பதி, சர்க்கரை நோய் குறித்தான விழிப்புணர்வை தொடங்கியுள்ளனர். அதற்கு முதற்படியாக புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்.

சர்க்கரை நோய் விழிப்புணர்வு
சர்க்கரை நோய் விழிப்புணர்வு
author img

By

Published : Nov 27, 2022, 8:46 PM IST

கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் மருத்துவர் எஸ். வேலுமணி எழுதிய "கட்டுப்படுத்துங்கள் வெல்லுங்கள் நீரிழிவு நோயை" புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்தை ஓய்வு பெற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் வெளியிட, ஓய்வு பெற்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் அசோக் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் இப்புத்தகம் குறித்து மருத்துவர் எஸ்.வேலுமணி உரை ஆற்றினார்.

விழாவில் புத்தகத்தை தயாரித்த வேலுமணி பேசும்போது, “வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் சர்க்கரை நோய், மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய சீர்கேட்டை உருவாக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு மக்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதற்கு கோவை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நீரழிவு நோயை தடுக்க ஆரம்ப காலத்திலேயே நாம் விழிப்புணர்வுடன் இருந்து மீளலாம் உணவு கட்டுப்பாடு தினசரி உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோயை தடுக்கலாம்” என்றார்.

சர்க்கரை நோய் விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பது ‘அன்றாட பழக்கவழக்கங்களே’ - ‘அறிவியல் மருத்துவ வசதிகளே’ என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முனைவர் குரு ஞானாம்பிகா நடுவர் பொறுப்பு வகித்தார். இதில் ஆறு பேச்சாளர்கள் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் உரையாற்றினர்.

இதையும் படிங்க: தஞ்சையில் சிலம்பம் போட்டி.. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.