கோவை: காரமடை அருகே உள்ள சீலியூர், நீலாம்பதி என்ற மலைவாழ் கிராமத்தைச்சேர்ந்தவர், மருதன் - சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இரண்டாவதாக கர்ப்பம் தரித்த சித்ராவிற்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காரமடையில் இருந்து 108 ஆம்புலன்ஸை தொடர்புகொண்டதன்பேரில் மருத்துவ உதவியாளர் பாலமுருகன், ஓட்டுநர் அமுதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இரவு 11.30 மணி அளவில் பலத்த மழையைப் பொருட்படுத்தாமல் சித்ராவை ஆம்புலன்ஸில் ஏற்றி, கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
நீலாம்பதி பகுதியில் வரும்போது பிரசவ வலி அதிகமானதால் சித்ராவுக்கு ஆம்புலன்சில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாய் மற்றும் சேய் இருவரையும் முதல் உதவி சிகிச்சைக்காக சீலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
இதையும் படிங்க: ராஜபாளையம் மலைப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள்;போராடி மீட்பு