விவசாய பாசனத்திற்காக ஆழியார் சிறுபுனல் மின் நிலையத்திலிருந்து தண்ணீரை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, விவசாயிகள் திறக்கப்பட்ட தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், வினாடிக்கு 120 கனஅடி வீதம் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும், இந்தத் தண்ணீர் பொள்ளாச்சி பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள ஆறாயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள முதல்போக நெல் சாகுபடிக்கும் தென்னை, வாழை சாகுபடிக்கு பயன்படும் எனக்கூறினார்.
மேலும் பேசிய அவர், முதலமைச்சர் அறிவித்த மூன்று அணைகள் கட்ட கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதனை விரைவில் முடித்துக்காட்டுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.