கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரையைச் சேர்ந்தவர் விவசாயி ரத்தினசாமி. இவரின் இருசக்கர வாகனம் ஒத்தக்கால் மண்டபம் அங்காளம்மன் கோயில் அருகே நிறுத்தி வைத்திருந்தபோது காணாமல் போயுள்ளது. இதேபோல் மோகன பிரியா என்பவரின் வாகனம் ஒத்தக்கால் மண்டபம் ஈஸ்வரன் கோயில் அருகே நிறுத்தி வைத்திருந்தபோது காணாமல் போயுள்ளது.
இந்தத் தொடர் திருட்டு குறித்து செட்டிப்பாளையம் காவல் துறையினர் விசாரணை செய்தபோது, 70 வயதான துரை என்பவர் வாகனங்களை திருடியிருப்பது தெரியவந்தது. மேலும், கீர் உள்ள இருசக்கர வாகனத்தை ஓட்டத் தெரியாததால் மொபெட் வாகனங்களை மட்டும் திருடி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், துரையின் மீது இருசக்கர வாகனங்களை திருடியதாக 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. துரையை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து துரையை நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைந்தனர்.
இதையும் படிங்க : இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிய இளைஞர்கள் - ஷாக்கிங் வீடியோ!