ETV Bharat / state

தண்ணீர் தொட்டியில் கிடந்த சிறுவனின் சடலம்! அஜாக்கிரதையால் நடந்த உயிரிழப்பா? போலீசார் விசாரணை!

கோவை நாகராஜபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து ஆறு வயது சிறுவன் பலி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 8:04 PM IST

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் அடுத்த நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் ஆறு வயது மகன் குகன்ராஜ். சிறுவன் குகன்ராஜ் வேடப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் குகன்ராஜ் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு விளையாட சென்றுள்ளான். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படும் நிலையில், சித்தி நாகராணி என்பவர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.

இந்நிலையில், நாகராஜபுரத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் இருக்கும் 6 அடி ஆழம், 3 அடி அகலத்திலான தரைமட்ட தண்ணீர் தொட்டியில், சிறுவன் குகன்ராஜ் கிடப்பதை, பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் கண்டு உள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், அப்பகுதி மக்களுக்கு தகவல் அளித்து உள்ளனர்.

பின்னர் அங்கு வந்த சிறுவன் குகன்ராஜின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சாம்பிராணியால் ஏற்பட்ட தீ விபத்து; மூச்சுத்திணறி மூதாட்டி உயிரிழப்பு!

கட்டிடத் தொழிலாளர்கள் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியை மூடாமல் சென்றதால் தான் சிறுவன் அதனுள் விழுந்து இறந்து விட்டதாக கூறி, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்ந்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுவன் குகன்ராஜின் பெற்றோரை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும் நாகராஜபுரத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் பணியில் ஈடுபட்டு இருந்த கட்டிட பணியாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து நடிகை ஜெயப்பிரதா வழக்கு; இஎஸ்ஐ நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.