ETV Bharat / state

சாலை விபத்தில் உயிரிழந்த ஜிவி பிரகாஷ் பட இயக்குநர் - Director Shankar

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Arun
Arun
author img

By

Published : May 15, 2020, 4:11 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவர் சென்னையில் தங்கி நடிகர் விக்ரம் நடித்த 'ஐ' உள்ளிட்ட பல்வேறு படங்களில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார்.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை வைத்து '4 G' என்ற படத்தை அருண் பிரசாத், வெங்கட் பார்க்கர் என்ற பெயரில் இயக்கிவந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகளில் உள்ளன.

Arun
இயக்குநர் ஷங்கரின் உதவிய இயக்குநர்கள்

தற்போது ஊரடங்கு காரணமாக அருண் பிரசாத் அன்னூரில் இருக்கும் தனது வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று (மே 15) காலை மேட்டுப்பாளையம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்துக்கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதியது.

Arun
'4 G' படத்தின் போஸ்டர்

இதில் சம்பவ இடத்திலேயே அருண் பிரசாத் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அருணின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா இல்லாத மாவட்டமாக மாறிய கோவை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.