கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை30) 303 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 257 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் மொத்தமாக வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 868 ஆக உயர்ந்தது.
இன்று கரோனாவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.