ETV Bharat / state

போக்சோ கைதி தப்பி ஓடிய விவகாரம்.. கோவை மத்திய சிறை காவலர்கள் 3 பேர் தற்காலிக பணி நீக்கம்! - Covai into POCSO convict Escaped issue

Covai POCSO convict Escaped issue: கோவை மத்திய சிறையில் இருந்து கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோடிய நிலையில், கோவை மத்திய சிறை காவலர்கள் மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 10:41 PM IST

கோவை மத்திய சிறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் நிலையில், நன்னடத்தை கைதிகளை போலீசார் அங்கு பணியமர்த்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை (அக். 29) பெட்ரோல் பங்கில் பணியிலிருந்து கூடலூர் மகளிர் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதான விஜய் ரத்தினம் என்ற கைதி தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து கோவை காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி, பணியிலிருந்த ஜெகநாதன், கனிராஜ், விக்னேஷ் குமார் ஆகிய காவலர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மூன்று காவலர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: கோவை மத்திய சிறையில் இருந்து போக்சோ கைதி தப்பியோட்டம்.. பெட்ரோல் பங்க் பணியின் போது தப்பியதாக தகவல்!

போக்சோ வழக்கில் கூடலூரில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கைதி விஜய் ரத்தினம் என்பவரை நன்னடத்தை காரணமாக, சிறை நிர்வாகம் நடத்தும் பெட்ரோல் பங்கில் இரவு நேரப் பணிக்கு அனுமதித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கமபோல் பணிக்குப் பின்னர் சிறைக்கு வந்த கைதிகளில் விஜய் ரத்தினம் மட்டும் இல்லாதது கண்டு சிறைக்காவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அவர் பெட்ரோல் பங்கில் இருந்து தப்பியோடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க: "சுட்டுக் கொல்வதற்கு எங்க அப்பா என்ன தீவிரவாதியா?" - உயிரிழந்த விவசாயி மகள் ஆதங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.