கோயம்புத்தூர்: காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 26 ஆவது பட்டமளிப்பு விழா வரும் ஜூலை 9 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
காருண்யா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமை தாங்கி பட்டங்களை வழங்க உள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், விண்வெளித்துறைக்கான இந்திய அரசின் செயலாளருமான சோமனாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்துகிறார்.
பி.டெக், எம்.பி.ஏ., பி.காம், பி.எஸ்.சி (விவசாயம்), பி.எஸ்.சி (தோட்டக்கலை), எம்.டெக், எம்.ஏ, எம்.எஸ்.சி, பி.எச்டி போன்ற முனைவர் படிப்புகளை வெற்றிகரமாக முடித்த 1,691 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது, மேலும் சிறந்த மாணவர்களுக்கு வேந்தர் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
இவ்விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், விண்வெளித்துறைக்கான இந்திய அரசின் செயலாளருமான சோமனாத் மற்றும், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிஸ் பல்கலைகழகத்தின் சுற்றுசூழல் ஆய்வுத்துறையின் தலைவர் பேராசிரியர் கொலின் பிரைஸ் ஆகியோருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படவுள்ளது, என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 20 கல்லூரிகள்: முதலமைச்சர் திறந்து வைப்பு